Episodios

  • சொல்வனம் | Amarnath | story | Vethanth Vetantham | எழுத்தாளர் | அமர்நாத் | 1954 – Y2K பிரச்சினை | சிறுகதை
    Jul 15 2024

    சொல்வனம் | Amarnath | story | Vethanth Vetantham | எழுத்தாளர் | அமர்நாத் | 1954 – Y2K பிரச்சினை | சிறுகதை


    எழுத்தாளர் அமர்நாத்- ஒரு

    சிறு முன்னுரை

    அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரென்று, உறுதுணை தேடுமின், பரிமளவல்லி, கோகிலா இப்போது இங்கே இல்லை, நிலம் நீர் காற்று, மாயபிம்பம்,யாருக்கோ கட்டிய வீடு, காதம்பரியம், காயகல்பம் ஆகிய நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார்.



    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/06/09/1954-y2k-பிரச்சினை/



    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    Más Menos
    13 m
  • சொல்வனம் | மலர்விழி மணியம் | சிறுகதை | காமாட்சிசுந்தரியும் அப்பாவும்| Malarvizhi Maniyam | Story |
    Jul 15 2024

    சொல்வனம் | மலர்விழி மணியம் | சிறுகதை | காமாட்சிசுந்தரியும் அப்பாவும்| Malarvizhi Maniyam | Story |

    எழுத்தாளர் மலர்விழி மணியம்- சிறு முன்னுரை

    மலர்விழி மணியம் தற்போது கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ்ஸில் வசித்து வருகிறார். கடந்த ஏழு வருடங்களாக வாசிப்பின் வசம் சாய்ந்து ரஷ்ய இலக்கியத்தின் ஜாம்பவான்களான லியோ டால்ஸ்டாய் அவர்களின் படைப்புகளும் தஸ்தவஸ்கி அவர்களின் படைப்புகளும் சில வாசித்துள்ளதுடன் தமிழில் திரு.ஜெயமோகன் அவர்களது படைப்புகளிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. இவர் இரு புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். இலக்கிய வாசிப்பிற்குப் பிறகு இவர் எழுதிய சிறுகதைகளில் சில “சொல்வனம்” மின்னிதழில் வெளியாகி உள்ளன.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/07/14/காமாட்சிசுந்தரியும்-அப்/

    ஒலி வடிவம், காணொளி:

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    Más Menos
    22 m
  • எழுத்தாளர் | பரிவை சே.குமார் | சிறுகதை | "வியாழ நோக்கம்" | Nadukal | Parivai S Kumar | story | "Viyazha Nokkam"
    Jul 13 2024

    எழுத்தாளர் | பரிவை சே.குமார் | சிறுகதை | "வியாழ நோக்கம்" | Nadukal | Parivai S Kumar | story | "Viyazha Nokkam"

    எழுத்தாளர் பரிவை சே.குமார் - சிறு முன்னுரை


    கல்லூரியில் படிக்கும் போதே தினபூமி, மாலைமலர், சுபமங்களா போன்ற பல பத்திரிக்கைகளில் கதைகள், கவிதைகள் எழுதிய இவர் தற்போது அமீரகத்தில் பணி புரிகிறார்.


    தற்சமயம் வலைப்பூ, காற்றுவெளி, நடுகல், கேலக்ஸி, வாசகசாலை, யாவரும், கலக்கல் ட்ரீம்ஸ், தமிழ்நெஞ்சம், அகல், ஸ்வர்ணக்கமலம், எங்கள் பிளாக் உள்ளிட்ட நிறைய இணையத்தளங்களில் இவர் கதைகள், கட்டுரைகள் தொடர்ந்து எழுதி வருவதுடன்

    சிறுகதைத் தொகுப்புகளாக எதிர்சேவை, பரிவை படைப்புகள், வாத்தியார் வெளியிட்டு இருக்கிறார்.

    வேரும் விழுதுகளும், திருவிழா, காளையன், சாக்காடு என்ற இவரது நாவல்களும் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன.

    தஞ்சை பிரகாஷ் வளரும் எழுத்தாளர் விருதும், கேலக்ஸியின் பாண்டியன் பொற்கிழி விருதும் பெற்றிருக்கிறார். பரிவை சே குமாரின் விமர்சனக் கட்டுரைகளும்

    விருதுகள் பெற்றுள்ளன.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://nadukal.in/வியாழ-நோக்கம்/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    Más Menos
    12 m
  • ஆவநாழி | டிசம்பர் 2023 - ஜனவரி 2024 | நாஞ்சில் நாடன் | கட்டுரை | தேவர் அனையர் கயவர் | Article | Aavanalzhi -21 | December 2023 - January 2024| Thevar Anaiyar Kayavar
    Jul 13 2024


    ஆவநாழி | டிசம்பர் 2023 - ஜனவரி 2024 | நாஞ்சில் நாடன் | கட்டுரை | தேவர் அனையர் கயவர் | Article | Aavanalzhi -21 | December 2023 - January 2024| Thevar Anaiyar Kayavar


    எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் கட்டுரை "தேவர் அனையர் கயவர்"

    நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை.

    நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது.

    நாஞ்சில் நாடனின் "எட்டுத்திக்கும் மதயானை" அவருடைய குறிப்பிடத்தக்க நாவல். மும்பை குற்ற உலகைப் பின்னணியாகக் கொண்டது இப்படைப்பு.

    நாஞ்சில் நாடன் எழுதி சாகித்திய விருது பெற்ற "சூடிய பூ சூடற்க" சிறுகதைத் தொகுப்பு மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது

    To read: / முழுவதும் வாசிக்க

    https://tinyurl.com/4zt6bkuk

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    Más Menos
    11 m
  • ஜா. ராஜகோபாலன் | கட்டுரை | | J. Rajagopalan | Pinnum Alum Seyvan
    Jul 13 2024

    ஜா. ராஜகோபாலன் | கட்டுரை | | J. Rajagopalan | Pinnum Alum Seyvan

    ஜா. ராஜகோபாலன்- ஆசிரியர் குறிப்பு.


    திருநெல்வேலி, வாசுதேவநல்லூரில் 1976ல் பிறந்தார். பி. காம்., எம். பி. ஏ. படித்துள்ளார். விற்பனைத்துறை மேலாண்மை சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார்.

    ஜா. ராஜகோபாலன் கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், மேடைப் பேச்சாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆவார். வல்லினம், அந்திமழை, புரவி, சொல்வனம், ஜெயமோகன் தளங்களில் கட்டுரை எழுதி வருகிறார். இலக்கியம் சார்ந்த பயிற்சிபட்டறைகளையும் நடத்தி வருகிறார்.

    ஆட்டத்தின் ஐந்து விதிகள் என்ற இவரது புத்தகத்தைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://neeli.co.in/3226/

    ஒலி வடிவம், காணொளி:

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    Más Menos
    39 m
  • Solvanam | Milagu Novel-Part 73 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 73 | இரா. முருகன்
    Jul 13 2024

    Solvanam | Milagu Novel-Part 73 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 73 | இரா. முருகன்


    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/06/23/மிளகு-அத்தியாயம்-எழுபத்-2/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    Más Menos
    17 m
  • சொல்வனம் | எழுத்தாளர் | பரிவை சே.குமார் | சிறுகதை | "மழைக் காளான்" | Parivai S Kumar | story | "Mazhai KaLan"
    Jul 13 2024

    சொல்வனம் | எழுத்தாளர் | பரிவை சே.குமார் | சிறுகதை | "மழைக் காளான்" | Parivai S Kumar | story | "Mazhai KaLan"

    எழுத்தாளர் பரிவை சே.குமார் - சிறு முன்னுரை


    கல்லூரியில் படிக்கும் போதே தினபூமி, மாலைமலர், சுபமங்களா போன்ற பல பத்திரிக்கைகளில் கதைகள், கவிதைகள் எழுதிய இவர் தற்போது அமீரகத்தில் பணி புரிகிறார்.


    தற்சமயம் வலைப்பூ, காற்றுவெளி, நடுகல், கேலக்ஸி, வாசகசாலை, யாவரும், கலக்கல் ட்ரீம்ஸ், தமிழ்நெஞ்சம், அகல், ஸ்வர்ணக்கமலம், எங்கள் பிளாக் உள்ளிட்ட நிறைய இணையத்தளங்களில் இவர் கதைகள், கட்டுரைகள் தொடர்ந்து எழுதி வருவதுடன்

    சிறுகதைத் தொகுப்புகளாக எதிர்சேவை, பரிவை படைப்புகள், வாத்தியார் வெளியிட்டு இருக்கிறார்.

    வேரும் விழுதுகளும், திருவிழா, காளையன், சாக்காடு என்ற இவரது நாவல்களும் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன.

    தஞ்சை பிரகாஷ் வளரும் எழுத்தாளர் விருதும், கேலக்ஸியின் பாண்டியன் பொற்கிழி விருதும் பெற்றிருக்கிறார். பரிவை சே குமாரின் விமர்சனக் கட்டுரைகளும்

    விருதுகள் பெற்றுள்ளன.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2013/08/09/மழைக்-காளான்/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    Más Menos
    9 m
  • Sutha Ganapathy | short story | Malligai MaNam | மங்கையர் மலர்| சுதா கணபதி | சிறுகதை | "மல்லிகை மணம்"
    Jul 13 2024

    Sutha Ganapathy | short story | Malligai MaNam | மங்கையர் மலர்| சுதா கணபதி | சிறுகதை | "மல்லிகை மணம்"

    எழுத்தாளர் சுதா கணபதி - சிறு முன்னுரை

    தமிழில் சிறுகதைகள், தொடர் கதைகள் படிக்க மிகவும் பிடிக்கும். பணி

    ஓய்விற்கு பிறகு பொழுது போக்கிற்காகவும் மனத்திருப்திக்காகவும். எழுத ஆரம்பித்தேன்

    மங்கையர் மலர், கோகுலம், கதிர், அமுதசுரபி இதழ்களில் கதைகள் பிரசுரமாகி உள்ளன.‌

    மங்கையர் மலர் நடத்திய மாற்றுத்திறனாளிகள் பற்றிய விழிப்புணர்வு சிறுகதை போட்டியில் "மல்லிகை மணம்" கதைக்கு முதல் பரிசு கிடைத்து டிசம்பர் 16-31-2017 இதழில் பிரசுரமானது.


    To read முழுவதும் வாசிக்க

    மங்கையர் மலர் , டிசம்பர் 16-31-2017 இதழ்



    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, : Saraswathi Thiagarajan

    Más Menos
    17 m