Episodios

  • கண்ணோட்டம் - முல்லைக்கு தேர் தந்த பாரி | Kannottam - Mullaikku Ther Thantha Paari
    May 28 2023

    கடையேழு வள்ளல்களில் ஒருவன் பாரி. வேளிர் மன்னர்களில் சிறந்தவன். சக உயிர்களிடத்தில் அன்பு காட்டுவது யார்க்கும் இயல்பு. தன் வருத்தத்தை தெரிவிக்க இயலாத அஃறினை பொருட்களிடத்தில் அன்பு காட்டுவது எளிதன்று. அப்படி ஒரு அன்பு , கொடை கொடுத்த நிகழ்வே இக்கதை. முல்லைக்கு தேர் தந்த பாரி கதை.

    கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை

    உண்மையான் உண்டிவ் வுலகு

    அதிகாரம்:கண்ணோட்டம் குறள் எண்:571

    Más Menos
    6 m
  • இடனறிதல் - இளந்திரையன் | Idanarithal - Ilanthiraiyan
    May 21 2023

    காவிரிக்கு கரை கட்டிய கரிகாலன், பெருந்திருமாவளவன் பற்றிய கதை. பெருந்திருமாவளவனின் உறவில் ஒருவன் தான் தொண்டைமான் இளந்திரையன். அவனுக்கு சோழ நாட்டின் வளமையைக் கண்டு பொறாமை. அவன் செருக்கை வென்று காவிரிக்கு கரை எடுக்க பணித்தார் பெருந்திருமாவளவன்!

    எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து

    துன்னியார் துன்னிச் செயின்

    அதிகாரம்:இடனறிதல் குறள் எண்:494

    Más Menos
    4 m
  • மக்கட்பேறு - சேரன் செங்குட்டுவன் | Makkatperu - Cheran Senguttuvan
    May 9 2023

    சங்க காலத்து சேர மன்னர்களுள் சிறந்தவர் சேரன் செங்குட்டுவன். இமயமலை வரைக்கும் போய் வெற்றி கொண்டவர். அங்கிருந்து கல் எடுத்து வந்து , கண்ணகிக்கு கோவில் கட்டியவர். அவர் இளவலான இளங்கோவடிகளுக்கும் அவருக்குமான பாசப்பிணைப்பை சொல்வது இந்தப்பதிவு.

    பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

    மக்கட்பேறு அல்ல பிற.

    அதிகாரம்:மக்கட்பேறு குறள் எண்:61

    Más Menos
    4 m
  • வினைத்திட்பம் - கரிகால் சோழன் | Vinaithitpam - Karikal Cholan
    Apr 28 2023

    கரிகாலன் சங்ககால மன்னர்களுள் மிகசிறந்தவன். வரலாற்றில் நான்கைந்து கரிகாலர்கள் உண்டு, இல்லை ஒரே ஒரு கரிகாலன், அவன் தான் அணை கட்டியவன், அவன் தான் வழக்கு தீர்த்தவன், எல்லாளனுக்கு உதவியவன் என்ற கருத்தும் உண்டு. ஒருவரோ , ஐவரோ, கரிகாலர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

    “உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

    அச்சாணி அன்னார் உடைத்து”.

    அதிகாரம்:வினைத்திட்பம் குறள் எண்:667

    Más Menos
    5 m
  • இறைமாட்சி - பொற்கைப் பாண்டியன் | Iraimatchi - Porkai Pandian
    Apr 23 2023

    பாண்டிய மன்னர்களுள் ஒருவன் பொற்கைப் பாண்டியன் . இவன் தன் குடிமக்களுக்கு வேண்டியன செய்து மக்களை பாதுகாக்கும் மன்னவன். அவன் மக்களின் பாதுகாப்புக்கு செய்த செயல் அவனை இறை நிலைக்கு உயர்த்தியது.

    “முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

    இறை என்று வைக்கப்படும்”

    அதிகாரம்:இறைமாட்சி குறள் எண்:388

    Más Menos
    5 m
  • நட்பு - கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் | Natpu - Koperum Cholanum Pisiraandhaiyaarum
    Apr 10 2023

    உறையூராண்ட சோழ அரசர்களுள், கோப்பெருஞ் சோழன் ஒருவன். நண்பர் உலகிற்கு நல்ல எடுத்துக் காட்டாய் விளங்கியவன் கோப்பெருஞ் சோழன். ஒருவரோடொருவர் நட்புக் கொண்டு வாழ்வதற்கு, இருவரும் ஓர் ஊரினராதலும், ஒருவரையொருவர் பலகால் கண்டு பழகுதலும் வேண்டுவதின்று; இருவர் உள்ளமும் ஒன்றுபட்டால் அதுவே போதும் என்ற அரிய கருத்தினைக் கொண்ட

    “புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

    நட்பாம் கிழமை தரும்”

    என்ற திருக்குறளுக்கு உதாரணமாக கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும் கொண்ட நட்பு பற்றிய வரலாறு இது

    அதிகாரம்:நட்பு குறள் எண்:785

    Más Menos
    5 m