Episodes

  • காலண்டர் மூலம் நடந்த மாபெரும் மௌனப்புரட்சி! | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 14
    Aug 30 2022

    புத்தாண்டு பிறந்திருக்கிறது. கனவும் மறதியும்தான் நம் வாழ்க்கைப் பயணத்தைச் செதுக்குகின்றன. கடந்த காலத்தின் கசப்புகளை மறக்கவே மனம் என்றும் விழைகிறது.


    எழுத்து & குரல்  - உதயச்சந்திரன்|

    Podcast channel manager- பிரபு வெங்கட்

    Show more Show less
    11 mins
  • இயற்கைப் பேரழிவுகள்..மீண்ட மக்கள்..வெளிவராத கதை | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 13
    Aug 30 2022

    பதினைந்து ஆண்டு களுக்கு முன்னர் சென்னை மாநக ராட்சியின் துணை ஆணைய ராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டம். மிரட்சியுடனும் பிரமிப்பு டனும் சென்னையைப் பார்த்துப் பழகிய எனக்கு, ரிப்பன் மாளிகையின் வழியே சென்னை நகரின் நீள அகலத்தை நிர்வகிப்பது சுவாரஸ்யமான அனுபவ மாகத்தான் இருந்தது. காலை ஆறரை மணியிலிருந்து துப்புரவுப் பணி மேற்பார்வை. பின், நாள் முழுக்க அலுவலகம். நள்ளிரவு ஒரு மணியிலிருந்து அதிகாலை மூன்றரை மணி வரை போக்குவரத்துக்கு இடையூறின்றி நடக்கும் சாலைப்பணிகளை ஆய்வு செய்வது. மீண்டும் காலை ஆறரை மணி. ஞாயிற்றுக்கிழமை காலை மட்டும் சற்றுத் தாமதமாக அலுவலகம் செல்லலாம். பருவ மழைக்காலங்களில் ரிப்பன் மாளிகையின் எழுதப்படாத விதி இதுதான் அப்போது.பதினைந்து ஆண்டு களுக்கு முன்னர் சென்னை மாநக ராட்சியின் துணை ஆணைய ராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டம். மிரட்சியுடனும் பிரமிப்பு டனும் சென்னையைப் பார்த்துப் பழகிய எனக்கு, ரிப்பன் மாளிகையின் வழியே சென்னை நகரின் நீள அகலத்தை நிர்வகிப்பது சுவாரஸ்யமான அனுபவ மாகத்தான் இருந்தது. காலை ஆறரை மணியிலிருந்து துப்புரவுப் பணி மேற்பார்வை. பின், நாள் முழுக்க அலுவலகம். நள்ளிரவு ஒரு மணியிலிருந்து அதிகாலை மூன்றரை மணி வரை போக்குவரத்துக்கு இடையூறின்றி நடக்கும் சாலைப்பணிகளை ஆய்வு செய்வது. மீண்டும் காலை ஆறரை மணி. ஞாயிற்றுக்கிழமை காலை மட்டும் சற்றுத் தாமதமாக அலுவலகம் செல்லலாம். பருவ மழைக்காலங்களில் ரிப்பன் மாளிகையின் எழுதப்படாத விதி இதுதான் அப்போது.

    எழுத்து & குரல் - உதயச்சந்திரன் |

    Podcast channel manager- பிரபு வெங்கட்

    Show more Show less
    10 mins
  • அது என்ன சிந்துவெளிப் புதிர்? | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 12
    Aug 30 2022

    முப்பது ஆண்டுகளுக்கு முன் நடந்தது அந்தச் சம்பவம். ஒடிசாவின் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் அந்த இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி. மதுரையில் பிறந்து முதுகலைத் தமிழ் இலக்கியம் படித்து, முதன்முதலில் தமிழிலேயே சிவில் சர்வீஸ் தேர்வெழுதி வெற்றிபெற்றவர். தமிழ்மேல் தீராக்காதல் கொண்டவரைக் காலம் கலிங்கத்தில் பணியமர்த்தியது. ஒடிசாவைப் புரிந்து கொள்வதற்காக அதன் உள்ளும் புறமும் சுற்றிக்கொண்டிருந்தவர் கண்ணில், கோராபுட் நகருக்கு அருகேயிருந்த ஒரு மைல் கல் புதிய தரிசனத்தைக் கொடுத்தது. ‘தமிளி’ என்று எழுதப்பட்டிருந்த அந்தக் கல் அவரது பயணத்தை மாற்றியது.


    எழுத்து & குரல் - உதயச்சந்திரன் |

    Podcast channel manager- பிரபு வெங்கட்

    Show more Show less
    11 mins
  • ‘மன்னிப்பும் பெருந்தன்மையும் மிகச்சிறந்த ஆயுதங்களே!’ | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 11
    Aug 30 2022

    இப்போதெல்லாம் நாளிதழ்களைப் புரட்டினாலே ஏமாற்றமும் குழப்பமும்தான் மிஞ்சுகின்றன.குறிப்பாக, விளையாட்டுச் செய்திகளைத் தாங்கிவரும் பக்கத்தில் சோகம் ததும்புகிறது. நேரத்தையும் நிறத்தையும் மாற்றி ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் கிரிக்கெட்; தோற்றுப்போவதற்காகவே இந்திய மண்ணுக்குவரும் வெளிநாட்டு வீரர்கள்; டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் கடந்த பத்தாண்டுகளாகக் காணப்படும் அதே பழைய பெயர்கள்; இந்தியாவில் நடந்தேறும் மற்றுமொரு சதுரங்கப் போட்டியில் நார்வே மீண்டும் தமிழகத்தை வீழ்த்திய பெரும் துயரம்… இவற்றுக்கு நடுவில், இளவேனில் வாலறிவன் தங்கம் வென்ற செய்தி மட்டுமே ஆறுதல் தருகிறது

    எழுத்து & குரல் - உதயச்சந்திரன் |

    Podcast channel manager- பிரபு வெங்கட்


    Show more Show less
    10 mins
  • கம்பீர நடை..90 வயது.. - சாம் மானெக் ஷா! | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 10
    Aug 30 2022

    அந்த மனிதரின் கம்பீர நடைப்பயிற்சியைக் காண குன்னூர் நகரமே காத்துக்கிடக்கும். செல்லப் பிராணிகள் அணிவகுக்க, தன் மனைவியின் கைகோத்து, நேர்கொண்ட பார்வையும் மிடுக்குமாக அவர் நடைபயிலும் அழகே அழகுதான். வழியெங்கும், வணங்குபவர்களின் வயதுக்கேற்ப ராணுவ ஒழுங்கோடு மேலெழும்பி அசைந்துதிரும்பும் அவர் கரங்கள். குழந்தைகளைப் பார்த்தால் மட்டும், சட்டென்று மென்முகம் தரித்து கன்னங்களை செல்லமாகத் தட்டி மலர்கள் பரிசளித்துச் செல்வதை வழக்கமாகவே வைத்திருந்தார். 90 வயதைத் தாண்டியும் அந்தமனிதரைப் பார்க்க நாடெங்கிலும் இருந்து பலர் வந்துகொண்டே இருந்தார்கள். முக்கிய தலைவர்கள் ராணுவ தளபதிகள், உயர் அதிகாரிகள், நிர்வாகிகள்... எனப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

    Show more Show less
    10 mins
  • தமிழ்த்தாயின் தலைமகன் எல்லீசன்! | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 9
    Aug 30 2022

    கடல் கடந்து வந்து இந்த மண்ணையும் மக்களையும் மனதார நேசித்தவருக்குத் தலைமுறைகள் தாண்டியும் நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும். தமிழ்மொழி அரியணை ஏற செயல்திட்டம் வகுத்துக் கொடுத்தவரை என் மனம் இப்படித்தான் வரித்து வைத்திருக்கிறது...

    எழுத்து & குரல் - உதயச்சந்திரன் |

    Podcast channel manager- பிரபு வெங்கட்

    Show more Show less
    12 mins
  • நான் பார்த்து வியந்த நல்லாசிரியர்! | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 8
    Aug 30 2022

    அரை மணி நேரம் தொடர்ந்து முயன்றுகொண்டே இருக்கிறேன். அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.பதற்றம் பற்றிக்கொண்டது. எண்பது வயதாகிறது அவருக்கு. என்ன ஆனதோ என்ற கவலை... புலம்பத் தொடங்கிவிட்டேன். ஒரு திருமண விழாவுக்காக ஒட்டுமொத்தக் குடும்பமும் சென்னையில் முகாமிட்டிருக்க, திடீரென்று என் நினைவுகள் மட்டும் ஏன் அவரை நோக்கிச் சென்றதோ தெரியவில்லை. எல்லோரும் என்னை வித்தியாசமாகப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.

    எழுத்து & குரல் - உதயச்சந்திரன்|

    Podcast channel manager- பிரபு வெங்கட்

    Show more Show less
    12 mins
  • தமிழ் எழுத்துக்கள்,தமிழ் நூல் பற்றி தெரியாத தகவல்கள்! | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 7
    Aug 30 2022

    நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஞாயிற்றுக்கிழமை. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு அருகே இருக்கும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் வளாகத்தில் குழுமியிருக்கிறோம். எல்லோரின் முகத்திலும் பதற்றம் தொற்றியிருக்கிறது.

    எழுத்து & குரல் - உதயச்சந்திரன் |

    Podcast channel manager- பிரபு வெங்கட்

    Show more Show less
    13 mins