Episodios

  • பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான சுரண்டல்கள்; எழுப்புவோம் எதிர்க்குரல்! - அவளின் குரல் - 20
    Mar 8 2022

    முறைப்படுத்தப்பட்ட துறைகளில் பணிக்குச் செல்லும் பெண்களே, சம்பளம் முதல் பாலியல் தொல்லைகள் வரை இத்துணை பாகுபாட்டுக்கு, சுரண்டல்களுக்கு ஆளாகிறார்கள் எனில், முறைப்படுத்தப்படாத துறைகளில் வேலைபார்க்கும் பெண்களின் நிலையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. #StopExploitingWomen

    Más Menos
    5 m
  • பணியிடத்தில் பாலியல் கொடுமை: விமானப்படை அதிகாரிக்கே இதுதான் நிலை; நீங்கள் தேசத்துக்குப் பாதுகாப்பா? - அவளின் குரல் - 19
    Sep 27 2021

    தாமதமான நடவடிக்கை என்பதன் மறைமுகப் பொருள், குற்றம் சுமத்தப்பட்டவரை பாதுகாப்பது அன்றி வேறில்லை. ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க முனையும் இவர்களை எப்படி நாட்டின் பாதுகாப்புப் படை அதிகாரிகள் என்று ஏற்றுக்கொள்வது? #VoiceOfAval


    Más Menos
    6 m
  • `லைவ்' நிகழ்ச்சியில் பாலியல் இழிசொல்; கிழியும் முகமூடிகள், வெளிப்படும் வக்கிரம்! - அவளின் குரல் - 18
    Aug 13 2021

    `இத்தனை ஆண்டுகளாகக் கட்டிக்காத்த மரபு, கண்ணியம்' என்கிறீர்கள் வெங்கடேஷ். உண்மையில் அது, இத்தனை ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த வக்கிரம்.

    Más Menos
    4 m
  • ஒரு சிறுமியின் தைரியம் என்ன செய்யும்? - பத்மா சேஷாத்ரி பள்ளி சர்ச்சையும் அலசலும்! - அவளின் குரல் - 17
    May 26 2021

    தன் பள்ளியின் மாணவிகளுக்கு நடந்த குற்றம் குறித்த துடிப்பைவிட, தங்கள் பள்ளியின் பெயர் பழுதுபடாமல் பார்த்துக்கொள்ளும் மனநிலையையே பள்ளியின் அறிக்கை காட்டுகிறது. மேலும், பள்ளியின் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளிலும், `பள்ளியின் மாண்பு காக்கப்பட வேண்டும்' என்ற அரற்றலே உள்ளதே தவிர, பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும், அவர்களின் மனநலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறை இல்லை.

    Más Menos
    7 m
  • சீற்றமடையும் கொரோனா... திருவிழாக்கள் டு திருமணக் கூடல்கள்... விபரீதத்துடன் விளையாடலாமா? - அவளின் குரல் - 16
    Apr 27 2021

    மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை; மருந்துகள் தட்டுப்பாடு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தடுப்பூசித் தட்டுப்பாடு - திரும்பிய பக்கமெல்லாம் இத்தகையக் கதறல்களால் இந்திய சுகாதாரத் துறையின் நுரையீரல் திணறிக் கொண்டிருக்கிறது. ஆம், கொரோனா மீண்டும் வேகமெடுத்து, ஒரு மாதத்துக்கும் மேலாக ஒட்டுமொத்த இந்தியாவையும் அறல வைத்துக் கொண்டிருக்கிறது.

    Más Menos
    3 m
  • தயாநிதி, ராதாரவி, வானதி, ஆதித்யநாத்... செக்ஸ் பிரசாரம் செய்யாதீர்கள் ப்ளீஸ்! - அவளின் குரல் - 15
    Apr 5 2021

    தேர்தல் பிரசாரத்தில் ஏன் சம்பந்தமே இல்லாமல் பெண்களைக் கீழ்த்தரமாகப் பேசும் கமென்ட்கள் மீண்டும் மீண்டும் மேடையேறுகின்றன? ஆ.ராசா, லியோனியைத் தொடர்ந்து அடுத்ததாக தயாநிதி மாறன், ராதாரவி வரிசையில் வந்து சேர்ந்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம், `பெண்களின் பாதுகாப்பு, முன்னேற்றம்' என்று பேசிக்கொண்டே, வானதி ஶ்ரீனிவாசனும் ஆதித்யநாத்தும், உண்மையில் அதற்கு முரண் அரசியலில் நிற்கிறார்கள்.

    Más Menos
    9 m
  • ஆ.ராசா மட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமியும் மன்னிப்புக் கேட்க வேண்டும்! - அவளின் குரல் - 14
    Mar 30 2021

    தேர்தல் பிரசாரத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகள் தேவைப்படுகின்றன ஆ.ராசாவுக்கு. தன்னை `விக்டிமைஸ்’ செய்து அனுதாபம் தேடிக்கொள்ள அந்த வார்த்தைகள் கிடைத்திருக்கின்றன முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு.

    Más Menos
    9 m
  • பெண்களின் `பேரல்' இடை, நாப்கின் குமுறல், பெர்முடா... இவைதான் உங்கள் லட்சணமா கட்சிகளே? - அவளின் குரல் - 13
    Mar 26 2021

    வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று எல்லா திக்கிலும், அறிவு போதாமையுடன் அரசியல் களத்தில் தள்ளாடும் ஆண்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். தேர்தலில் உங்கள் கட்சி ஜெயிக்கலாம், தோற்கலாம்... ஆனால் நீங்கள் ஏற்கெனவே தோற்றுவிட்டீர்கள்!

    Más Menos
    9 m