Episodios

  • அதிகாரிகள் மற்றும் நீதித்துறை | Bureaucrats & Judiciary | Ram and Baski
    Jul 26 2024

    ஜனநாயக இந்தியாவில் மக்களால் தேர்வு செய்யப்படாத ஆனால் சக்திவாய்ந்த மக்களாட்சி அங்கமாக இருப்பது அரசு அதிகாரிகளும் நீதித்துறையும். பிரதிநிதித்துவத்தை விட இவ்விரு அமைப்புகள் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தாலும் இவ்விரு அமைப்புகளும் ஏகபோகமான அதிகாரக் குவியலை தன்னகத்தே வைத்துக் கொண்டு செய்யும் அபத்தங்களை காணும் போது அவர்களின் மீதான நம்பிக்கை குறைந்து கொண்டே வருவதையும் நாம் காண்கிறோம் அதிகாரக் குவியலுக்கு மாற்று என்ன என்பதை விரிவாக உரையாடி இருக்கிறோம்.


    கேளுங்க!

    ராட்டை தி வீல்.

    Más Menos
    47 m
  • ஊடகமும் ஜனநாயகமும் - Media and Democracy | Ram and Baski
    Jul 19 2024

    ஊடகமும் ஜனநாயகமும்


    தினம் தினம் நம்மை ஊடகங்கள் தாக்குகின்றன, திடுக்கிடும் செய்தி முதல், பீதி கிளப்பும் செய்திகள் வரை, நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை, வெறும் பொழுதுபோக்கான விஷயமாக மாற்றுவது இன்றைய ஊடகங்களின் பெரும் பங்கு.


    ஜனநாயக நிகழ்வுகளில் இத்தகைய பொறுப்பற்ற ஊடகங்கள் செயலால், அடுத்த தலைமுறைக்கு, தெளிவின்மையும், நம்பிக்கை இன்மையும் தான் நாம் அளிக்கும் செய்தி.


    தொடர்ந்து கேளுங்க

    Más Menos
    41 m
  • வாய்மையும் துணிவும் - Courage & Conviction | Ram and Baski
    Jul 12 2024

    இன்றைய சூழலில் நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சியும் எதிர் கட்சியும் நடந்துகொள்ளும் விதத்தை எவ்வாறு புரிந்து கொள்வது? பொழுது போக்கு பட்டிமன்றத்தை போன்று செயல் படுவது உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கு அழகல்ல, உலகின் அதிகம் மக்கள் தொகையை கொண்ட, ஏழைகளும், நலிந்தவரும் மிகுந்த நாட்டிற்கு அவசியமும் இல்லை. ஆனால் நாம் எப்போதும் இப்படி இருந்ததில்லை, இருக்க வேண்டிய அவசியமும் இல்லை..

    இந்த தொடரில் ஜனநாயகத்தை பற்றி நாம் பேசப்போகிறோம்.

    Más Menos
    45 m
  • ஜனநாயகத்தின் பெரும்பயணம் | Democracy - Standing Rock vs Flowing River | Ram and Baski
    Jul 5 2024

    ஓட்டு போட்டதுடன் நம்ம கடமை முடிந்தது அப்படினு ஜனநாயகத்தில் இருக்க முடியாது. இங்க நாம எல்லாரும் ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களாவது நாட்டை நிர்வகிக்கும் பெரும்பணியில் ஈடுபடுவது அவசியம்.


    ஜனநாயகத்தின் தூண்கள் என்று சொல்லக்கூடிய மக்கள் பிரதிநிதிகள், நீதித்துறை, நிர்வாக கட்டமைப்பு மற்றும் நாலாம் தூண் என்கிற ஊடகத்துறை, இவர்கள் அனைவரையும் அரவணைத்து, நாட்டை வழிநடத்தும் புரிதலும், திறமையும் கொண்ட மக்கள் இருக்கும் நாட்டில் தான் ஜனநாயகம் தழைக்கும்.


    பேசுவோம் ராட்டை

    Más Menos
    43 m
  • தரவுகளும் உறவுகளும் | Numbers vs Relationship | Ram and Baski
    Jun 28 2024

    தொலைப்பது வெறும் சாய்ஸ் இல்ல,

    அடையாளங்களும் தான்!!

    அட்டை ஏந்தி லைன் ல நின்னு அரசாங்க அடையாளத்தில் நம்மை அடக்கிய பிறகு,

    ஒவ்வொரு பில்லுக்கும் ஃபோன் நம்பர் கொடுத்து, பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்கு நம்முடைய சுதந்திரத்தையும் அடையாளத்தையும் சேர்த்தே இன்றைய சந்தையில் அடைத்துக் கொள்ளுகிறோம்!

    இதில் பெரிதும் அடிவாங்குவது உள்ளூர் உறவுகளும், உணர்வுகளும் தான்…

    மேலும் கேளுங்க 100 ஆவது எபிசோடை தாண்டிய ராட்டை தி வீல்!

    Más Menos
    38 m
  • புள்ளிவிவர புழுகு மூட்டை | Lies, Damned Lies and Statistics | Ram and Baski
    Jun 21 2024

    lies, damned lies and Statistics

    Más Menos
    38 m
  • Data and Deepfake | Ram and Baski
    Jun 14 2024
    வன்போலி | Data & Deepfake வன்போலி எனும் வார்த்தை ராட்டை குழுவால் உருவாக்கப்பட்டத்து காரணம் டீப்ஃபேக் எனும் ஆங்கில வார்த்தைக்கு நேரடியான ஒற்றைத் தமிழ்ச் சொல் இல்லை, ஆழமான போலித்தனம் என்றே கூகுள் மொழியாக்கம் செய்யும், அது quantitative lexicography செய்கிறது, ஆனால் deepfake என்பது ஒரு நிகழ்கால தொழிற்நுட்ப அரசியல் சொல் அதற்கான இரண்டு வார்த்தைகளை யோசித்தோம் மீபோலி அல்லது வன்போலி என, அதில் ஒன்றை பயன்படுத்துகிறோம். இதுவரை பெண்களின் உடலை புறநிலைப்படுத்தியே (objectification) செய்து அவர்களை கீழ்த்தரமாக சித்தரிக்க பயன்படுத்தப்பட்ட AI தற்போது நமது வாழ்வில் பல்வேறு தளங்களில் குறிப்பாக வாக்கரசியல் மற்றும் பொருளாதாரத்தில் நிகழும் வன்போலித் தன்மையை குறித்து விரிவாக உரையாடியுள்ளோம். இதற்கு பலிகடா ஆனாது பல்வேறு உழைக்கும் வர்க்க மக்கள், அதற்காக பயன்படுத்தப்பட்ட பகடைக்காய்கள் அம்பாதி, நந்தன் நீலகேனி, நாரயாணமூர்த்தி, ராஜ்தீப், விராட்கோலி உள்ளிட்ட பல பிரபலங்களை வன்போலி காணொளி மூலம் பேச வைத்து பணம் பரிப்பது கடந்த சிலவார அரசியல் நிலவரம்.. வாங்க உரையாடலுக்குள் செல்வோம்... ராட்டை குழு ராம் | பாஸ்கி | திலிப்
    Más Menos
    41 m
  • தரவும் தரகும் : Data Brokers | Ram and Baski
    Jun 7 2024

    2006 ஆம் ஆண்டு கணிதவியலாளர் கிளைவி ஹம்பி தரவு என்பது கச்சா எண்ணெயின் நவீன வடிவமென எழுதினார் அதைத் தொடர்ந்து பலரும் Data is money, data is resource என தரவுச் சந்தையை முன்வைத்து எழுதி வந்தனர் ஆனால் தற்போது தரவுகள் என்பது நுகர்வுச் சந்தையாக மட்டுமல்லாமல், அரசியல் சந்தையில் முக்கியப்பங்காற்றும் கருவியாக உருவெடுத்துள்ளது, தரவும் தரகும் எனும் தலைப்பில் 2024 பாராளுமன்றத் தேர்தலை மையமாக வைத்து உரையாடியுள்ளோம். வலையொலியை கேட்டப் பின்னர் உங்கள் கருத்துக்களை எழுதவும்.


    நன்றி

    Más Menos
    33 m